ரூ. 120 கோடியை அள்ளிய ஜோதா!
{image-Jodhaa-akbar-(250_19032008.jpg tamil.filmibeat.com}ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியாகியுள்ள ஜோதா அக்பர் படம் உலகம் முழுவதும் ரூ. 120 கோடி வசூலை அள்ளி பெரும் சாதனை படைத்துள்ளதாம்.
ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யா ராய் நடிப்பில், அசுதோஷ் கோவரிகர் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜோதா அக்பர் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது.
படம் வெளியாகி 31 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ரூ. 120 கோடி வசூலை அள்ளியுள்ளாராம் அக்பர். இந்தித் திரையுலகின் முந்தைய சாதனைகளையும் ஜோதா அக்பர் முறியடித்துள்ளது.
இந்தியாவில் ரூ. 90 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 30 கோடியும் வசூல் செய்துள்ளது ஜோதா.
உலகம் முழுவதும் 25 நாடுளில் 1500 தியேட்டர்களில் ஜோதா அக்பர் திரையிடப்பட்டுள்ளது. இந்தி தவிர தமிழ், தெலுங்கு, டச்சு, அரபி ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் வெற்றிக்கு கதையும், எனது இயக்கமும் காரணம் என்றாலும் என்னைப் பொருத்தவரை ரித்திக் ரோஷன், ஐஸ்வர்யாவின் பிரமிப்பூட்டும் நடிப்புதான் முக்கிய காரணம் என்கிறார் கோவரிகர்.


Click it and Unblock the Notifications











