twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராமேஸ்வரம் பேரணி-பொதுக்கூட்டம்: குவிந்தனர் கலைஞர்கள்!

    By Staff
    |

    kollywoods Journey to Rameshwaram on Protest
    ராமேஸ்வரம்: இலங்கையில் தமிழரக்ளுக்கு எதிராக சிங்கள ராணுவம் நடத்தும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும், நிரந்தர தீர்வு காணவும் ஆர்ப்பாட்டம் நடத்த தமிழ்த் திரையுலகின் படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் பெருமளவு ராமேஸ்வரத்தில் இன்று குவிந்துள்ளனர்.

    சன் லைவ்:

    பிற்பகல் 2 மணிக்குத் துவங்கும் திரையுலகினரின் இந்த பரபரப்பான பேரணியை, சன் நியூஸ் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்புகிறது. மாலை நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டமும் நேரடியாக ஒளிபரப்பாகிறது.

    இந்தப் போராட்டத்துக்காக இயக்குநர் பாரதிராஜா, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம நாராயணன் தலைமையில் 2000 இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நேற்று மாலை தனி ரயிலில் ராமேஸ்வரம் புறப்பட்டனர்.

    இன்று காலை ராமேஸ்வரம் சேர்ந்த அனைவரும் அவரவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள விடுதிகளுக்குச் சென்றனர். இயக்குநர் பாரதிராஜா மற்றும் போராட்ட ஏற்பாட்டாளர்கள், பேரணி, பொதுக்கூட்டம் நடக்கும் இடங்களைப் பார்வையிட்டனர்.

    பிற்பகல் 2 மணிக்கு திரையுலகினரின் பிரமாண்டப் பேரணி துவங்குகிறது.

    இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது:

    எங்கள் இன உணர்வைக் காட்ட, ஈழத்தில் செத்து மடியும் சகோதரனின் உயிரைக் காப்பாற்றக் கோரிக்கை விடுக்க இங்கே வந்திருக்கிறோம். திட்டமிட்டபடி எல்லாம் சிறப்பாக நடக்கும். இந்த தமிழ் கலைஞர்களின் குரலை உலகமே செவி கொடுத்துக் கேட்கும்போது, மத்திய அரசின் காதுகளில் மட்டும் விழாமலா போகும்... நிச்சயம் இலங்கைத் தமிழர்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும், விடிவு பிறக்கும்.

    எங்கள் வேண்டுகோளுக்கு இணங்கி இங்கே திரளாக வந்திருக்கும் இனமான உணர்வு கொண்ட கலை உள்ளங்களுக்கு நன்றி என்றார் பாரதிராஜா.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X