சிறுமி-தவளை திருமணம்: குஷ்பு கொதிப்பு

சென்னையில் நடந்த ரிட்ஸ் இதழின் விருது வழங்கும் விழாவில் குஷ்பு பேசுகையில்,
விழுப்புரம் அருகே பள்ளிப்பட்டு கிராமத்தில் தவளைக்கும் சிறுமிக்கும் திருமணம் நடந்ததுள்ளது. ஊர் நலனுக்காக கிராமத்தினர் கூடி இந்த திருமணத்தை நடத்தி வைத்ததாகத் தெரிவித்துள்ளனர்.
ஊர் செழிக்கவும், நோய் நொடி வராமல் இருக்கவும் வீடுகள் தீப்பற்றி எரியாமல் இருக்கவும் இந்த திருமணத்தை நடத்தினார்களாம்.
நாம் எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்? விஞ்ஞானம் வளர்ந்துள்ள இந்தக்காலத்தில் இது போன்ற ஒரு திருமணம் நடந்திருப்பது மூட நம்பிக்கையில் மக்கள் இன்னும் சிக்கிக் கிடப்பதையே காட்டுகிறது.
இந்தியா சந்த்ராயன் விண் கலத்தை பறக்கவிட்டுள்ளது. இளம் தலைமுறையினர் ஐ.டி. போன்ற பல்வேறு துறைகளில் சாதனை படைத்துக் கொண்டிருக்கின்றனர்.
இப்படி எவ்வளவோ வளர்ச்சி ஏற்பட்டு வரும் இக் காலத்தில் சிறுமிக்கும், தவளைக்கும் திருமணம் நடத்தி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த மூட நம்பிக்கைக்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டும் என்றார் குஷ்பு.


Click it and Unblock the Notifications











