முனி இரண்டாம் பாகத்தில் லாரன்ஸ் - அனுஷ்கா

தமிழ் - தெலுங்கு இருமொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படத்துக்கு தமிழில் முனி-2 எனவும், தெலுங்கில் காஞ்சனா என்றும் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் லாரன்ஸ் நடித்து இயக்கிய முனி படத்தின் தொடர்ச்சிதான் இந்தப் படம். முதல் பாகத்தில் லாரன்ஸுடன் நடித்தவர் வேதிகா. இந்தப் படத்தில் அவருக்கு பதில் அனுஷ்காவை ஒப்பந்தம் செய்துள்ளார் லாரன்ஸ்.
சிம்பு தேவன் இயக்கத்தில் இரும்புக் கோட்டை முரட்டு சிங்கத்தை முடித்து விட்டார் லாரன்ஸ். இம்மாத இறுதியில் இந்தப் படம் ரிலீசாகிறது.
எனவே இன்னும் சில தினங்களில் முனி -2 வேலைகளைத் துவங்குகிறார் லாரன்ஸ்
Comments


Click it and Unblock the Notifications