நடிகை வனிதா மீது வக்கீல் கொலை மிரட்டல் புகார்

By Sudha

Vanitha
நடிகை வனிதா - ஆகாஷ் விவகாரம் இப்போதைக்கு ஓய்வதாகத் தெரியவில்லை. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் கொலை மிரட்டல் விடுத்ததாக நடிகை வனிதா மீது, முதல் கணவர் ஆகாஷின் வக்கீல் போலீசில் புதிய புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதாவும், முதல் கணவர் ஆகாஷூம் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு பிறந்த மகன் விஜய் ஸ்ரீ ஹரி (9) தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆகாஷ் தொடர்ந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக நடிகை வனிதா, அவரது 2-வது கணவர் ஆனந்தராஜ் ஆகியோர் உயர்நீதிமன்றத்துக்கு வந்தனர். அப்போது, அங்கு வந்த ஆகாஷின் வக்கீல் சசிகுமாரிடம் (36) அவர்கள் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில், வக்கீல் சசிகுமார் சென்னை உயர்நீதிமன்ற போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், ''நான் ஆகாஷ் வழக்கில் ஆஜராகி வருகிறேன்.

வழக்கில் ஆஜராகிவிட்டு, நீதிமன்ற படியில் இறங்கி வரும்போது, நடிகை வனிதா, அவரது 2-வது கணவர் ஆனந்தராஜ், அவரது நண்பர் ஜாகீர் ஆகிய 3 பேர் என்னை தள்ளிவிட்டு சண்டை போட்டனர். உன்னால்தான் இவ்வளவு பிரச்சினையும் வந்தது என்று, எனக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் மனு தொடர்பாக, சப்-இன்ஸ்பெக்டர் வேணு கோபால் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X