twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மல்லிகா உத்தரவு-வெடித்த ராவல்!

    By Staff
    |

    Mallika Sherawat
    டிவி பேட்டிக்கு வந்த பாலிவுட் நடிகர் பரேஷ் ராவல், சூட், கோட் போட்டு வந்தால்தான் நான் பேட்டி தருவேன் என மல்லிகா ஷெராவத் கூற கடுப்பாகிய ராவல் கொதித்தெழுந்து விட்டார்.

    பாலிவுட்டின் கவர்ச்சிப் புயல், மல்லிகா ஷெராவத், சர்ச்சைப் புயலாகவும் மாறியிருக்கிறார்.

    மல்லிகா ஷெராவத், ராகுல் போஸ், பரேஷ் ராவல் நடித்துள்ள படம் 'மான்கயே முகல் ஏ ஆஸம்'. இப் படம் தொடர்பான நேருக்கு நேர் நிகழ்ச்சிக்கு, மும்பையிலுள்ள ஒரு தனியார் டி.வி. சேனலின் ஸ்டூடியோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்நிகழ்ச்சிக்கு குர்தா, பைஜாமா அணிந்து வந்திருந்தார், பரேஷ் ராவல்.

    அப்போது அங்கு வந்த மல்லிகா ஷெராவத் பரேஷ் ராவலை ஒரு மாதிரியாகப் பார்த்து விட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் காதில் ஏதோ கிசுகிசுத்து விட்டு விறுவிறுவென தன் காருக்குப் போய் விட்டாராம்.

    பரேஷிடம் தயங்கியபடி வந்த அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், உங்க உடை மல்லிகாவுக்கு பிடிக்கல, நீங்க கோட் சூட் போட்டால்தான் அவர் பேட்டி தருவாராம். அவரோட பேட்டி ரொம்ப முக்கியம். ப்ளீஸ் சார், நாங்களே கோட் சூட் தரோம். நீங்க அத போட்டுக்கிட்டா போதும், என்று சொல்லி முடிப்பதற்கு முன் வெடித்து விட்டாராம் பரேஷ்.

    நான் எந்த உடை போட்டா இவங்களுக்கு என்ன... நான் வரவில்லை, என்று கத்தியபடி அரங்கத்தை விட்டு வெளியே வந்து விட்ட பரேஷின் காலில் விழாத குறையாக சமாதானப்படுத்தி கோட் சூட் போட சம்மதிக்க வைத்தார் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர். பிறகுதான் அரங்கத்துக்குள்ளேயே வந்தாராம் மல்லிகா.

    மல்லிகா 'சமத்து'ன்னு பெயர் வாங்குங்க ஷெராவத்!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X