2ம் ஆண்டில் மெகா டிவி

சில்வர் ஸ்டார் கம்யூனிகேசன் நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் மெகா டிவி இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
உலகெங்கிலும் வாழும் தமிழ் சமுதாயத்தை தன்னிகரற்றதாக உயர்த்தும், தனிப்பெரும் லட்சியத்துடன் உருவாகி உள்ள மெகா டி.வி.யின் முன்னோட்ட ஒளிபரப்பு, முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாள் அன்று தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக, மெகா டி.வி.யின் முழுமையான ஒளிபரப்பு அன்னை இந்திரா காந்தி பிறந்த நாளான (19-11-2007) அன்று தொடங்கியது.
தற்பொழுது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மெகா டி.வி. தமது பார்வையாளர்களை அசத்தும் வகையில் பல புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப உள்ளது.
இசைப்பிரியர்களுக்கு பிரியமான மெகா டிவியில் பொழுதுபோக்கு நிகழ்சிகள் எதுவானாலும் அவற்றினை பாரதத் திருநாட்டின் பாரம்பரியத்தைத் காக்கும் வகையில் தற்போது புதுப் பொலிவுடன், புதிய தொழில்நுட்பங்களுடன், புதிய நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
நல்வாழ்வுக்கு அவசியமான அறிவு சார்ந்த தகவல்களை, பொழுதுபோக்குடன் ஒருங்கிணைந்து வழங்கிவரும் மெகா டிவி, தொடர்ந்து பல புதிய மாற்றங்களுடன் புதிய நிகழ்சிகளை உலகத் தரத்திற்கு இணையாக ஒளிபரப்ப உள்ளது.
மேலும் இசைப்பிரியர்களை கவர்ந்து இழுக்கும் வகையில் கண்கவர் படப்பிடிப்பு தளங்களில் பல வடிவமைப்புகளுடன் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











