பாலிவுட் படங்களில் நடிக்க ரெடி .. பார்வதி ஓமனக்குட்டன்

By Staff

Parvathy Omanakuttan
இந்திப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக மிஸ் வேர்ல்ட் பட்டத்தை மயிரிழையில் தவற விட்ட பார்வதி ஓமனக்குட்டன் கூறியுள்ளார்.

நல்ல படங்களாக இருந்தால் நிச்சயம் நடிப்பேன், ஆனால் தற்போது எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவை. அந்த ஓய்வை முடித்து விட்டு வந்த பிறகு, வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் நடிப்பேன் என்கிறார் அவர்.

மிஸ் வேர்ல்ட் பட்டப் போட்டியில் பங்கேற்க ஜோஹன்ஸ்பர்க் நகருக்குச் சென்றிருந்த பார்வதி ஓமனக்குட்டன் நேற்று அதிகாலை தாயகம் திரும்பினார்.

மும்பை திரும்பிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். இருப்பினும் சினிமாதான் எனது எதிர்காலமா என்பதை நான் இன்னும் தீர்மானிக்கவில்லை.

முதலில் நான் நீண்ட ஓய்வை எடுக்கப் போகிறேன். அதன் பிறகு என்னைத் தேடி நல்ல பட வாய்ப்புகள் வந்தால் நிச்சயம் ஏற்பேன் என்றார் அவர்.

மிஸ் வேர்ல்ட் போட்டி குறித்து கேட்டபோது, நான் சிறப்பாகதான் செய்தேன். பட்டத்தைப் பெறத் தவறியது ஏமாற்றமாக உள்ளது.

தொடர்ந்து மாடலிங்கில் இருப்பேன். மிஸ் வேர்ல்ட் அனுபவம் சிறப்பாக இருந்தது. நிறைய தோழிகள் கிடைத்தனர்.

ஒரு நடுத்தர வர்க்கத்துப் பெண்ணுக்கு இந்த அளவுக்கு அங்கீகாரம் கிடைத்தது பெருமையாக உள்ளது. கனவு நனவானதாக உணர்கிறேன்.

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு ஆளான தாஜ் மஹால் ஹோட்டல் மற்றும் ஓபராய் ஹோட்டலுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளேன். அங்கு பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் போகிறேன். எனது தந்தை தாஜ் மஹால் ஹோட்டலில்தான் பணியாற்றி வருகிறார் என்றார் பார்வதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X