சேரன் - மிஷ்கின்: யுத்தம் செய்!

யுத்தம் செய் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் புதிய படத்தில் நாயகனாக நடிப்பவர் சேரன். வழக்கமாக காதல் தோல்வியில் மிடில்கிளாஸ் மாதவனாக அழுது வடியும் கேரக்டர்களாகச் செய்து வந்த சேரனுக்கு இதில் மிடுக்கான சிபிசிஐடி அதிகாரி வேடமாம்.
எந்த எல்லைக்கும் போகக் கூடிய, கொடூர முறைகளையும் பிரயோகிக்கக் கூடிய இந்த அதிகாரி, ஒரு கொலைக்கான பின்னணியை புலன் விசாரணை செய்ய, கடைசியில் அதில் கொலையாளியாக சிக்குபவர் ஒரு அழகான பெண். அதைத் தொடர்ந்து நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்களை திரைப்படமாக்குகிறார் மிஷ்கின்.
நிறைய புதுமுகங்கள் இடம்பெறும் இந்தப் படத்தின் இசையமைப்பாளரும் ஒரு புதுமுகமே.
சரி... ஹீரோ ரெடி, டைரக்டர் ரெடி... வேறு யார் வேண்டும் என்கிறீர்களா...? தயாரிப்பாளர்!
இன்னும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் யாரென்பது முடிவாகவில்லையாம். ஆனாலும் படப்பிடிப்பை ஆகஸ்டில் துவங்குவதென்றும், இடையில் பொருத்தமான தயாரிப்பாளர் வந்தால் அவர்களிடம் படத்தை ஒப்படைப்பதென்றும் முடிவு செய்துள்ளார் மிஷ்கின்.


Click it and Unblock the Notifications











