ராமேஸ்வரம் பேரணி: நடிகர்-நடிகைகள் வரவில்லை!

ராமேஸ்வரம் பேரணியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தாராளமாகச் செல்லலாம் என்று நடிகர் சங்கம் அறிவித்தாலும், நவம்பர் 1ம் தேதி சென்னையில் நடக்கும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றால் போதும் என்ற நினைப்பில் நடிகர் நடிகைகள் யாரும் ராமேஸ்வரம் செல்லவில்லை.
பாக்கியராஜ், ராஜேந்தர், அமீர், பாண்டியராஜன் போன்றோர் நடிகர்களாக மட்டுமல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர் என பல்வேறு சங்கங்களில் இருப்பதால் அவர்கள் மட்டும் இந்த பேரணியில் பங்கேற்கிறார்கள்.
இந்தப் பேரணியில் கலந்து கொள்ள எந்த நடிகையும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாரதிராஜா, வராதவர்களைப் பற்றி நாம் பேசுவது வீண் வேலை. நமக்கு நிறைய வேலை இருக்கிறது. தமிழுணர்வில் இங்கு வந்திருக்கும் நடிகர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு நன்றி. யார் வந்தார்கள் என்று இனி பார்க்கத் தேவையில்லை. உணர்வைக் காட்டுவதுதான் முக்கியம் என்றார்.


Click it and Unblock the Notifications











