வருகிறது இன்டர்நெட் சீரியல்!

By Staff

சினிமா, டிவியைத் தொடர்ந்து அடுத்த கட்டத்திற்குப் பொழுதுபோக்குத் துறை தாவத் தயாராகி விட்டது. விரைவில் வரவுள்ளது உலகின் முதல் இன்டர்நெட் சீரியல்.

இனி உலகின் எதிர்காலம் கம்ப்யூட்டர்களும், இன்டர்நெட்டும்தான் என்பது பிரவுசிங் செய்யும் பச்சைக் குழந்தைக்குக் கூடத் தெரியும். அந்த அளவுக்கு இன்டர்நெட்டின் தாக்கம் வியாபித்து வருகிறது.

இந்த நிலையில் இன்டர்நெட்டில் தொடர் தயாரிக்கும் அளவுக்கு அதன் வளர்ச்சி விரிவடைந்துள்ளது.

இணையதளங்களில் இப்போது திரைப்படங்களைப் பார்க்க முடிகிறது. தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பே கூட பல படங்களை இன்டர்நெட்டில் லீக் செய்து ரிலீஸ் செய்து விடுகிறார்கள்.

இந்த நிலையில்தான் டேஞ்சரின் டிஜிட்டல் என்டர்டெய்ன்மென்ட் லிமிட்டெட் என்கிற நிறுவனத்தைச் சேர்ந்த கேம்பஸ் 18 என்ற கிளை நிறுவனம், இன்டர்நெட் சீரியலைத் தயாரித்துள்ளது. இந்த தொடருக்கு ஆன் தி அன்வில் இன் இண்டியா என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவின் முதலாவது இன்டர்நெட் தொடராகும். இந்த தொடரில் நடிப்பதற்காக இந்தியா முழுவதும் 'நடிக, நடிகையர்' வேட்டையை நடத்தியது கேம்பஸ் 18.

மொத்தம் 500 பேர் தங்களது வீடியோ பதிவுகளை இதற்கு அனுப்பி விண்ணப்பித்திருந்தனர். அவர்களிலிருந்து 24 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் 8 பிரிவுகளில் அவர்களில் 8 பேருக்கு பரிசுகள் கிடைத்தன.

ஒட்டுமொத்த வீடியோ நுழைவுகளில் சிறந்த வீடியோ, சிறந்த பர்பார்மர், காமடி அல்லது மிமிக்ரியில் சிறப்பாக செய்தவர், வேடிக்கையான வீடியோ, ஒரிஜினல் வீடியோ, சிறந்த இசை வீடியோ என 8 பிரிவுகளின் கீழ் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெறுபவர்களின் பெயர்கள் மார்ச் 28ம் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படவுள்ளது.

ஆன்லைன் மூலமும் இவர்களைத் தேர்வு செய்யலாம். அதற்கான கடைசித் தேதி மார்ச் 25 ஆகும்.

16 வயது முதல் 24 வயதுக்குள்ளான இளைஞர் பட்டாளம் இந்த வீடியோ வேட்டையில் பங்கு பெற்றது.

இந்த வீடியோ வேட்டையின் நடுவர்களாக வீடியோ ஜாக்கி நிகில் சின்னப்பா மற்றும் இயக்குநர், நடிகர் மக்ரண்ட் தேஷ்பாண்டே ஆகியோர் கலந்து கொண்டனர்.

கேம்பஸ் 18 இணையதளத்தின் மூலமாக இளைஞர்கள் தங்களது திறமைகளைப் பதிவு செய்யலாம். பிளாக்குகள், படங்கள், இசைத் தொகுப்புகள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை இங்கு பதிவு செய்யலாம். சிறந்த திறமை உள்ளவர்களுக்கு உரிய வாய்ப்புகளை கேம்பஸ் 18 அளிக்குமாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X