twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிசம்பர் 20-ம் தேதி பிஆர்ஓ சங்க பொன்விழா

    By Staff
    |

    PROs with Director Ramanarayanan
    சினிமாவில் தவிர்க்க முடியாத சிலரில் பிஆர்ஓக்கள் என்ற பிரிவினரும் அடக்கம். பொதுமக்களுக்கு இவர்கள் எப்படி தொடர்புள்ளவர்களாக இருக்கிறார்கள் என்கிறீர்களா... ஒரு திரைப்படம் தொடர்பான ஸ்டில்கள், செய்திகளை, மக்களுக்குச் சொல்லும் பத்திரிகையாளர்களிடம் சேர்ப்பவர்கள் இவர்கள்தான்.

    பல நடிகர்-நடிகையர் தங்களது பல பொறுப்புகளை பிஆர்ஓக்களை நம்பி ஒப்படைத்துவிட்டு தொழிலில் கவனம் செலுத்திகிறார்கள்.

    அப்படி நம்பிக்கைக்குரிய இந்த தொழிலில் தமிழ் திரையுலகில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட பிஆர்ஓக்கள் உள்ளனர்.

    இப்படி ஒரு பிரிவினர் உருவாக்க் காரணமே எம்ஜிஆர்தான். அவர்தான் பிலிம் நியூஸ் ஆனந்தனை 1958ம் ஆண்டு தனது நாடோடி மன்னன் படத்தின் மூலம் பி.ஆர்.ஓவாக அறிமுகப்படுத்தினார். பின்னர் தென்னிந்திய திரைப்பட பத்திரிகையாளர்கள் யூனியன் என்ற அமைப்பு உஇருவாகும் அளவு வளர்ந்துள்ளனர் இந்தப் பிரிவினர்.

    திரையுலகத்திற்கும், செய்தியாளர்களுக்கும் பாலமாக இருக்கும் இவர்களின் பணி துவங்கப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைவதை, பொன் விழாவாகக் கொண்டாட முடிவு செய்துள்ளனர் பிஆர்ஓ சங்க நிர்வாகிகள்.

    இம்மாதம் 20 ந் தேதி பிலிம்சேம்பரில் நடைபெறவுள்ள இந்த பொன்விழா மேடையில் மூத்த உறுப்பினர்கள் பத்து பேர் கௌரவிக்கப்படுகிறார்கள். தமிழ் சினிமா தொடர்பான அத்தனை சங்கத்தை சேர்ந்த தலைவர்களும், நடிகர் நடிகைகளும் நேரில் வந்து விழாவை சிறப்பிக்க இருக்கிறார்கள்.

    இந்த தகவலை மக்கள் தொடர்பாளர்கள் யூனியன் தலைவர் விஜயமுரளி, செயலாளர் பெருதுளசி.பழனிவேல் ஆகியோர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

    இந்த விழாவையொட்டி சிறப்பு மலரும் வெளியிடுகிறார்கள்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X