மும்பை நடிகைகளை விட்டுத் தள்ளுங்கய்யா...! - ராதாரவி

By Staff

Surla movie still
தமிழ் படங்களில் மும்பை நடிகைகளுக்கு பதிலாக தமிழ் நடிகைகளை நடிக்க வையுங்கள் என நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி கேட்டுக் கொண்டார்.

ஸ்ரீநாச்சியாரம்மன் பிலிம்ஸ் சார்பில் அழகன் தமிழ்மணி தயாரிக்கும் படம் 'சுர்லா'. இதில் அவரது மகன் அஜய் கிருஷ்ணா நாயகனாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை சஞ்சிதா அறிமுகமாகிறார். சஞ்சய்ராம் இயக்குகிறார்.

படத்தின் ஹீரோவை அறிமுகம் செய்யும் விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட ராதாரவி பேசியதாவது:

நடிகர்கள் எங்வளவுதான் உயர்ந்தாலும் தயாரிப்பாளர்களை மதிக்க வேண்டும். அதுதான் அவர்கள் வளர்ச்சிக்கு நல்லது.

தமிழ்நாட்டில் திறமையான நடிகர், நடிகைகள் இருக்கிறார்கள். அவர்களுக்கு தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் வாய்ப்பளிக்க வேண்டும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் நல்ல திறமையாளர்களை கண்டுபிடிக்கலாம். முயற்சி பண்ணாதானே நடக்கும்!

அதை விட்டுவிட்டு எல்லா படத்திலும் மும்பை நடிகைகளை நடிக்க வைக்கிறார்கள். அவர்களுக்கு மொழியும் தெரியவில்லை, நமது பிரச்னைகளும் புரியவில்லை. திடீரென்று கோபித்துக்கொண்டு போய்விடுகிறார்கள். புகார்கள் நடிகர் சங்கத்துக்கு வருகிறது.

இதுபோன்ற பிரச்னைகளை எங்களால் தீர்க்க முடியவில்லை. காரணம் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேட முடியவில்லை. நாங்கள் அனுப்பும் கடிதத்துக்கும் அவர்கள் மதிப்பளிப்பதில்லை. சங்கத்திலும் உறுப்பினராவதில்லை. அதனால் தமிழ்நாட்டு தமிழ்ப் பொண்ணுங்க எவ்வளவுபோர் வாய்ப்பு கேட்டு வர்றாங்க... அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்கய்யா...", என்றார் ராதாரவி.

தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, இயக்குனர் சஞ்சய்ராம் ஆகியோரும் விழாவில் பேசினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X