பொன்னர் சங்கரில் ஏ.ஆர்.ஆர்.!

கருணாநிதியின் எழுத்தில் உருவான பொன்னர் - சங்கர் பெரும் வரவேற்பைப் பெற்ற வரலாற்றுப் புதினம். இக்கதை தற்போது திரைப்படமாகிறது. நடிகர் தியாகராஜன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில், பிரஷாந்த் நடிக்கவுள்ளார்.
இப்படத்திற்கு நாட்டின் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களைப் பயன்படுத்தப் போவதாக தியாகராஜன் அறிவித்திருந்தார். இந்திய திரையுலக வரலாற்றில் பொன்னர் சங்கர் பிரமாண்டப் படமாக அமைய வேண்டும் என்பதற்காகவே இந்த பிரமாண்டம் எனவும் அவர் கூறியிருந்தார்.
சில நாட்களுக்கு முன்புதான் ரஹ்மான் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். அப்போது தனது கே.எம். மியூசிக் கன்சர்வேட்டரி குறித்து கருணாநிதியிடம் விளக்கினார் ரஹ்மான்.
அந்த சந்திப்பின்போது பொன்னர் சங்கர் படத்திற்கு இசையமைக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டாராம். இதை ரஹ்மானும் ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
கலைஞரின் எழுத்துச் சூறாவளி - ரஹ்மானின் இசைப் புயல்; அமர்க்களத்திற்கு கேட்கவா வேண்டும்?


Click it and Unblock the Notifications











