100 படம் எடுக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ்

பிக் எண்டர்டெயின்மெண்ட் எனும் பெயரில் இந்தப் படங்களை எடுக்கப் போகிறது ரிலையன்ஸ்.
முதல்கட்டமாக தமிழில் 2 நேரடிப் படங்களையும் மற்ற மொழிகளில் 27 படங்களையும் ரூ.200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தொடங்குகிறார்கள்.
இவை தவிர மேலும் 70 படங்களை, ஏற்கெனவே அந்தந்த மொழிகளில் பிரபலமாக உள்ள தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கும் திட்டமுள்ளதாம். தமிழில் ஏற்கெனவே இது தொடர்பாக 3 பெரிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ரிலையன்ஸ்.
ரிலையன்ஸ் நிறுவனம் முழுக்க முழுக்க நேரடிப் படங்களை மட்டுமே எடுக்கும் திட்டத்துடன் முதலில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலை அணுகியது. ஆனால் அதற்கு ஒத்துழைப்பு தர மறுத்துவிட்டது கவுன்சில்.
இங்கே உள்ள தயாரிப்பாளர்களும் பலன்பெறும் வகையில் கூட்டுத் தயாரிப்புக்கு முன்வந்தால் மட்டுமே ஒத்துழைப்பு என்று கூறிவிட்டதன் விளைவுதான், இங்கே உள்ள நிறுவனங்களுடன் இப்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது ரிலையன்ஸ்.
சர்வதேச அளவில் ஹாலிவுட் படங்கள் தயாரிப்பதற்காக ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நிறுவனத்துடனும் கூட்டுத் தயாரிப்பில் இறங்கியுள்ளாராம் அனில் அம்பானி.


Click it and Unblock the Notifications











