நடிகை சதாவை நினைவிருக்கிறதா...

என்னதான் செய்கிறார்...
லீலை என்று ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தார். இந்தப் படம் நின்றுவிட, அதன் பிறகு எந்தத் தமிழ்ப் படத்திலும் நடிக்க மறுத்துவிட்டாராம்.
தெலுங்கில் சமீபத்தில் மட்டும் அவருக்கு 3 பட வாய்ப்புகள் வந்துள்ளன.
ஆனால் மூன்றுமே வேண்டாம் என மறுத்துவிட்டாராம்.
தமிழும் வேண்டாம், தெலுங்கும் வேண்டாம்... வேறு என்னதான் வேண்டும் அவருக்கு என்கிறீர்களா...
'ஒன்லி பாலிவுட்' என மும்பையிலேயே தங்கிவிட்டாராம் சதா.
இப்போது இந்தியில் மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருக்கும் அவர், எக்காரணம் கொண்டும் தெற்குப் பக்கமே வரமாட்டேன் என சபதம் எடுத்துள்ளாராம்.
மும்பை ரொம்ப ஸேப் இல்லை... பார்த்துங்க அம்மணி!
Comments


Click it and Unblock the Notifications