'இந்திக் கோழி'யாகிறது சண்டகோழி!!

ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்காக இந்தப் படத்தை எடுக்கப்போகிறாராம் லிங்கு.
கதாநாயகன், நாயகி மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லிங்கு தரப்பில் கூறப்படுகிறது.
லிங்குசாமி இப்போது கார்த்தி-நயன்தாராவை வைத்து மிகப் பெரிய பட்ஜெட்டின் சொந்தப் படத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்தப் படத்துக்காகத்தான் நயன்தாராவுக்கு ரூ.1.10 கோடி கொடுத்துள்ளார்.
ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு நாயகன் கார்த்தி இன்னும் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது. அவர் விரும்பும் மாற்றங்களைச் செய்து விரைவில் படத்தைத் துவங்கவிருக்கிறார் லிங்கு.
இந்தப் படம் முடிந்தபிறகு அடுத்து தமிழ் படம் எதையும் இயக்காமல் நேரடியாக சண்டகோழி இந்தியை எடுக்கவுள்ளாராம்.
Comments


Click it and Unblock the Notifications