twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'இந்திக் கோழி'யாகிறது சண்டகோழி!!

    By Staff
    |

    meera Jasmine and Vishal
    முன்னணி தமிழ் இயக்குநர் லிங்குசாமியும் இந்திக்குப் போகிறார். மீரா ஜாஸ்மீன்-விஷாலை வைத்து தமிழில் அவர் இயக்கி பெரும் வெற்றி பெற்ற சண்டகோழி படத்தை இந்தியில் தயாரிக்கப் பேச்சு நடந்து வருகிறது.

    ஒரு பெரிய கார்ப்பரேட் நிறுவனத்துக்காக இந்தப் படத்தை எடுக்கப்போகிறாராம் லிங்கு.

    கதாநாயகன், நாயகி மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என லிங்கு தரப்பில் கூறப்படுகிறது.

    லிங்குசாமி இப்போது கார்த்தி-நயன்தாராவை வைத்து மிகப் பெரிய பட்ஜெட்டின் சொந்தப் படத்தை எடுக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார். இந்தப் படத்துக்காகத்தான் நயன்தாராவுக்கு ரூ.1.10 கோடி கொடுத்துள்ளார்.

    ஆனால் இந்தப் படத்தின் கதைக்கு நாயகன் கார்த்தி இன்னும் ஒப்புதல் தரவில்லை என்று கூறப்படுகிறது. அவர் விரும்பும் மாற்றங்களைச் செய்து விரைவில் படத்தைத் துவங்கவிருக்கிறார் லிங்கு.

    இந்தப் படம் முடிந்தபிறகு அடுத்து தமிழ் படம் எதையும் இயக்காமல் நேரடியாக சண்டகோழி இந்தியை எடுக்கவுள்ளாராம்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X