ஆண்ட்ரியாவால் பிரச்சினை: 'இது மாலை நேரத்து மயக்கம்' டிராப்!

By Staff

Andrea Jeremiah
நடிகை ஆண்ட்ரியாவால் எழுந்த பிரச்சினை காரணமாக செல்வராகவன்- தனுஷ் கூட்டணியில் உருவாகவிருந்த இது மாலை நேரத்து மயக்கம் திரைப்படம் கைவிடப்பட்டது.

ஆயிரத்தில் ஒருவன் படத்துக்குப் பின் தனுஷ்-ஆண்ட்ரியாவை வைத்து இது மாலை நேரத்து மயக்கம் என்ற சைக்கோ-காதல் கதையை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார் இயக்குநர் செல்வராகவன்.

இந்தப் படத்தை கஸ்தூரி ராஜா தயாரிப்பதாக ஏற்கெனவே விளம்பரங்கள் வந்தன.

இந்த நிலையில் இது மாலை நேரத்து மயக்கம் படத்தில் ஆண்ட்ரியா நடிக்கக் கூடாது என செல்வராகவன் மனைவியும் படத்தின் உதவியாளர்களுள் ஒருவருமான சோனியா (அகர்வால்) எதிர்ப்பு தெரிவித்தாராம்.

ஆயிரத்தில் ஒருவன் ஷூட்டிங்கின்போது, செல்வாவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவியதால், இந்தப் புதிய படத்தில் ஆண்ட்ரியா தேவையில்லை என சோனியா கூறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, ஒரு பேட்டியில் ஆண்ட்ரியாவும், தான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை என்றும், படம் ட்ராப் என்றும் கூறியிருந்தார்.

இந்தச் சிக்கல்களால், மாலை நேரத்து மயக்கம் கைவிடப்பட்டதாகவும், அடுத்து ஒரு தெலுங்குப் படத்தை செல்வராகவன் இயக்குவார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X