'இம்சை' நாயகிகள்-சுந்தர்.சி டென்ஷன்

By Staff

Sunar C with Anjali
எனக்கு ஜோடியாக முன்னணி நடிகைகளை நடிக்க வைக்க ஆசைதான். ஆனால் அவர்கள் தரும் இம்சை தாங்காமல் தான் கதாநாயகியாக புதுமுகங்களை நடிக்க வைக்கிறேன் என்கிறார் சுந்தர் சி.

தெலுங்கில் வெற்றி பெற்ற படம், ஆக்ஷன் துரியோதனா. இப்படம் 'தீ' என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஜி.கிச்சா இயக்கும் இப்படத்தில் சுந்தர் சி ஜோடியாக நமீதாவும் ராகிணியும் நடித்துள்ளனர்.

உங்கள் படங்களில் நிறைய புது நடிகைகளை மட்டுமே நடிக்க வைப்பது ஏன்? என்ற கேள்விக்கு சமீபத்தில் சுந்தர் அளித்துள்ள பதில் சுவாரஸ்யமானது.

நான் இயக்குனராக இருந்த போதும், சரி, இப்போதும் சரி புதுமுகங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதையே விரும்புகிறேன். ஏனெனில் அவர்கள்தான் எந்த பிரச்சினையும் இல்லாமல் நடித்துக் கொடுக்கிறார்கள். அதே சமயம் முன்னணி நடிகைகள் செய்யும் இம்சை தாங்க முடிவதில்லை. அவர்கள் கேட்கும் சம்பளமும் அதிகம் உள்ளது.

அதனால்தான் புதுமுகங்களுக்கு வாய்ப்பு அளிக்க விரும்புகிறேன். தீ படத்தில் ராகிணி என் மனைவியாகவும், நமீதா காதலியாக வந்து அரசியல்வாதியாக மாறும் வேடத்திலும் நடித்துள்ளனர் என்றார்.

மேலும் விரைவிலேயே ரூ.15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புதுப்படம் ஒன்றை இயக்கி நடிக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

சுந்தர்.சி சொல்லும் காரணம் தீயாக இருக்கிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X