ராம் கோபால் வர்மா மீது 420 கேஸ்!

இதுகுறித்து டி சீரிஸ் நிறுவனத்தின் செயல் அதிகாரி நீரஜ் கல்யாண் கொடுத்துள்ள புகாரில், கடந்த 2006ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி ராம் கோபால் வர்மாவின் திரைப்பட நிறுவனத்திற்கும், சூப்பர் கேசட்ஸ் நிறுவனத்திற்கும் (டி சீரிஸ்) இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது.
அந்த ஒப்பந்தத்தின்படி, ராம் கோபால் வர்மாவின் ஆக், தர்வஸா பந்த் ரகோ, நிஷப்த், சிவா உள்ளிட்ட 14 படங்களின் ஆடியோ மற்றும் வீடியோ உரிமையை எங்களுக்குத் தர வேண்டும்.
இருப்பினும் ஆக் படத்தின் உரிமைக்காக, ரூ. 1 கோடியே 40 லட்சம் செலவிட்ட நிலையில், அதன் வீடியோ உரிமையை வேறு நிறுவனத்திற்குக் கொடுத்து விட்டார் வர்மா.
இது ஒப்பந்தத்தை மீறும் செயல், நம்பிக்ைக துரோகம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் பேரில் ராம் கோபால் வர்மாவின் மீது 409, 420, 421, 422, 385, 506, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கால் பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











