சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்குப் போட்டி!

இந்தோ சினி அப்ரிசியேஷன் அமைப்பு ஆண்டுதோறும் சென்னையில் சர்வதேச திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்த முறை இந்த விழாவில் பங்கேற்கும் தமிழ் திரைப்படங்களுக்குப் போட்டி முறையை ஏற்படுத்தி அதில் முதலிடம் பிடிக்கும் படத்துக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு மற்றும் விருது வழங்கப்படும் என அந்த அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இரண்டாவது சிறந்த படத்துக்கு ரூ 2 லட்சம் பரிசு மற்றும் விருதும் வழங்கப்படும். நடுவர் சிறப்பு விருதாக ரூ.1 லட்சமும் விருதும் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 15, 2008-ம் தேதி முதல் அக்டோபர் 15, 2009-ம் தேதிக்குள் சென்சார் செய்யப்பட்ட படங்கள் இந்தப் போட்டிக்கு தகுதி பெற்றவை. இதற்கான விண்ணப்பங்களை ஜெமினி பார்ஸன் வளாகத்தில் அமைந்துள்ள இந்தோ சினி அப்ரிசியேஷன் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
More from Filmibeat
award இந்தோ சினி அப்ரிசியேஷன் தமிழ்ப் படங்கள் திரைப்பட விழா போட்டி விருது cash prize film festival indo cine appreciation foundation


Click it and Unblock the Notifications











