ஆசிய திரைப்பட விழாவுக்கு வல்லமை தாராயோ தேர்வு

சிங்கப்பூரில் டிசம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை ஆசிய திரைப்பட விழா நடைபெறுகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இதில் கலந்து கொள்கின்றன.
தமிழில், மதுமிதா இயக்கத்தில், பார்த்திபன், சாயா சிங் நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பைப் பெற்ற வல்லமை தாராயோ படம் இந்த விழாவில் கலந்து கொள்கிறது.
இயக்குநர் மதுமிதாவின் முதல் படம் இது. அவரது தந்தைதான் இப்படத்தின் தயாரிப்பாளர். காதல் மணம் புரியும் தம்பதிகளின் இல் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு உரசல்களை அழகான காவியமாக கொடுத்திருந்தார் மதுமிதா.
இப்படத்தின் ஆடியோ விழாவில்தான், குஷ்பு, செருப்புக் காலுடன் சாமி சிலைக்கு முன்பு அமர்ந்திருந்தார் என்று கூறி பெரும் சர்ச்சை கிளம்பியது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications