வெளியானது ஆதவன் ஆடியோ

இயக்குநர் ஷங்கர் முதல் சிடியை வெளியிட இயக்குநரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான ராம நாராயணன் பெற்றுக் கொண்டார்.
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் நயன்தாரா சூர்யா நடித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லரை நடிகர் விஜய் வெளியிட, தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி பெற்றுக் கொண்டார்.
படத்தின் இரண்டு பாடல்களை திரையிட்டுக் காட்டினர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். பார்க்க, கேட்க சுமாராகத்தான் இருந்தன பாடல்கள். ஒருவேளை படம் வெளியான பிறகு ஹிட்டாகக் கூடும்!
முக்கியமான சமாச்சாரம்... நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர் என அழைப்பிதழில் பெயர் அச்சடிக்கப்பட்டும் மோகன்லால் வரவில்லை. விமான தாமதமே இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டது.
நாயகி நயன்தாராவும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஒரு மலையாள படத்தில் பிஸியாக இருப்பதால் வர முடியவில்லையாம்.
Comments
aadhavan audio launch ஆதவன் சினிமா சூர்யா தமிழ் நயன்தாரா பாடல்கள் வெளியீடு மோகன்லால் cinema surya udhayanidhi stalin


Click it and Unblock the Notifications