கஜினி ஷூடடிங் - அமீர்கான் ஒத்திவைப்பு

பாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான அமீர்கான் தனது உறவினர் இம்ரான் கானை வைத்து 'ஜானே து யா ஜானே நா' என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இந்தப் படத்தை வெற்றிப் படமாக்குவதற்காக தீவிரமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.
இம்ரான் கான் வேறு யாருமல்ல, பழம்பெரும் திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் நசீர் ஹூசேனின் பேரன் ஆவார். நசீர் ஹூசேன், அமீர்கானுக்கு மாமா ஆவார்.
நசீர் ஹுசேன்தான், 1988ம் ஆண்டு அமீர்கானை 'கயாமத் சே கயாமத் தக்' படத்தின் மூலம் இந்தித் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவேதான் இம்ரான் கானை வைத்து அமீர்கானே படம் தயாரிக்கிறார். இப்படத்தை சூப்பர் ஹிட் படமாக்க வேண்டும் என்ற வேகத்தில் உள்ளார் அமீர்.
முந்தைய சொந்தப் படங்களான லகான், தாரே ஜமீன் பர் ஆகிய படங்களுக்கு உழைத்ததைப் போலவே இப்படத்திற்கும் கடுமையாக உழைத்து வருகிறாராம் அமீர். 'ஜானே து ..' அமீருக்கு 3வது சொந்தப் படமாகும். இப்படத்தை அப்பாஸ் டயர்வாலா இயக்குகிறார்.
இந்தப் படத்திற்காக கஜினி படத்தின் முக்கிய கட்ட காட்சிகளின் படப்பிடிப்பை தள்ளி வைத்துள்ளாராம் அமீர்.


Click it and Unblock the Notifications











