இன்று 4வது ஆண்டு திருமண நாள் கொண்டாடும் அபி-ஐஸ்: குவியும் வாழ்த்துக்கள்
அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் தம்பதிகள் தங்களது நான்காவது ஆண்டு திருமண நாளை இன்று குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுகின்றனர்.
அபிஷேக் பச்சன் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை கடந்த 2007-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ம் தேதி மணந்தார். அன்றில் இருந்து பாலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடியாக வலம் வருகின்றனர். இன்று அவர்கள் தங்களது 4-வது திருமண நாளை முதன் முறையாக இந்தியாவில் கொண்டாடுகின்றனர். கடந்த 3 ஆண்டுகளும் வெளிநாடுகளில் தான் கொண்டாடினர்.
இந்த முறை அபிஷேக் பச்சனின் தம் மாரோ தம் படத்தின் விளமபர நிகழ்ச்சிகள் இருப்பதால் இந்தியாவில் இருக்கின்றனர். இன்று மாலை குடும்பத்தார் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் தங்கள் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்கின்றனர். இதில் சிக்கந்தர் கேர், கோல்டி பெஹ்ல், சோனாலி பிந்த்ரே, ஷ்ரிஷ்டி ஆர்யா, பிரீத்தி ஜிந்தா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications











