'அதுல' தெளிவாக இருக்காங்க-பெண் இயக்குநர் பாய்ச்சல்!

By Staff

Kulir 100 Degree
'குளிர் 100 டிகிரி' படம் மூலம் தமிழ் திரையுலகை நிமிர வைக்க வந்திருக்கிறார், அனிதா உதீப். சென்னை பெண்ணாக இருந்தாலும் இங்கு படிப்பை முடித்துவிட்டு ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல் பெர்க்கின் நிறுவனத்தில் ஒன்றறை வருடங்களுக்குமேல் வேலை பார்த்திருக்கிறாராம்.

தமிழ் மேலுள்ள தீராத காதலால் (!?) ஒரு தமிழ் படத்தை இயக்குவிருக்கிறார். படத்துக்குப் பெயர் குளிர் 100 டிகிரி (தமிழ் டைட்டில்தானான்னு எதுக்கும் ஒருமுறை சரி பார்த்துக்கங்க!)

நம்முடைய தமிழ் படத்தையும் ஹாலிவுட் தரத்துக்கு இணையாக தரமுடியும் என்று அனிதாவுக்கு அபார நம்பிக்கை.

அதென்ன, 'குளிர் 100 டிகிரி'-ன்னு ஒரு தலைப்பு?

மாணவர்களைச் சுற்றி பின்னப்பட்டிருக்கும் கதை இது. படப்பிடிப்பு சுவிட்சர்லாந்திலும் இந்தியாவிலும் நடக்கிறது, கதாநாயகியாக ரியா நடிக்கிறார், என்ற அனிதாவிடம், தமிழ்ப் பட அனுபவம் எப்படி இருக்கிறது? என்று ஆரம்பித்தோம்.

முன்னணி கதாநாயகிகளெல்லாம் அவங்க திறமையை வெளிக்காட்டும் வேடங்களில் நடிப்பதைவிட நடிப்புக்கேற்ற சம்பளம் கிடைக்குமா என்றுதான் பார்க்கிறார்கள். எப்பவும் அதில் மட்டும்தான் குறியாக, தெளிவா இருக்காங்க என்று சூடானார் அனிதா.

இந்த சம்பளத் தொல்லைக்குப் பயந்துதான், சொன்னபடி கேட்கக் கூடிய தான்யா, ரோஹித், ஆகாஷ், ரால்டே என புதுமுகங்களைப் பிடித்துப் போட்டிருக்கிறார் அனிதா.

கூல்...!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X