ஹீரோவை மிஞ்சிய டைரக்டர்

தமிழில் தரமான படங்களை, அழுத்தமான கதையம்சத்துடன் கூடிய படங்களைத் தரும் வெகு சில இயக்குநர்களில் அமீருக்கும் முக்கிய இடம் உண்டு.
இதுவரை அவர் இயக்கிய படங்கள் அனைத்துமே சூப்பர் டூப்பர் ஹிட்கள்தான். அது மட்டுமல்லா அவார்டுளை ஒரு கை பார்த்த படங்களும் கூட.
இதனால் அவரது படங்களுக்கு கோலிவுட்டில் மட்டுமல்லாது ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.
இந்த நிலையில் ஜெயம் ரவியை வைத்து கண்ணபிரான் படத்தை இயக்கவுள்ளார் அமீர். இப்படத்தில் அமீருக்கு தரப்பட்டுள்ள சம்பளம் ரூ.4 கோடியாம்.
இதில் என்ன விசேஷம் என்றால், படத்தின் ஹீரோவான ஜெயம் ரவிக்கு சம்பளம் ரூ. 2 கோடிதானாம்.
இப்படத்தின் கதை படு அமர்க்களமானது என்பதால் படத்தை பெரிதும் எதிர்பார்த்திருக்கிறாராம் ஜெயம் ரவி.
ஜெயம் ரவிக்கு மறக்க முடியாத கல்யாணப் பரிசாக கண்ணபிரான் அமையும் என எதிர்பார்க்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications