காய்கறிக்கு மாறிய முக்தா கோட்சே!

நடிப்பில் மட்டுமல்லாமல் சாப்பாட்டிலும் அசைவ நாயகியாக திகழ்ந்து வந்தவர் முக்தா. இவரது நடிப்பை விட கவர்ச்சிதான் பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு என்று பாராட்டைப் பெற்றது.
இந்த நிலையில் ஒரு டிபார்ட்மென்ட்டில் மட்டும் சைவத்திற்கு மாறியுள்ளார் - அது சாப்பாட்டில்.
இனிமேல் முழுச் சைவத்திற்கு மாறப் போவதாகவும், காய்கறிகளை மட்டுமே சாப்பிடப் போவதாகவும், கறி, மீன், கோழிக்கு குட்பை சொல்வதாகவும் அறிவித்துள்ளார் முக்தா.
உடலை தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க காய்கறிகள்தான் பெஸ்ட் என்பது முக்தாவின் கண்டுபிடிப்பு.
ஒருகாலத்தில் அசைவ வகைகளை தாறுமாறாக சாப்பிட்டு வந்தவர் முக்தா. ஆனால் யோகா கற்க ஆரம்பித்த பின்னர் அசைவம் அவருக்கு கசக்க ஆரம்பித்து விட்டதாம். தனது வாழ்க்கையில் யோகா பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறும் முக்தா, இனிமேல் நான் முழுச் சைவம் என்கிறார்.
தற்போது இவர் தனது வீட்டில் சமைத்த சைவச் சாப்பாட்டையே சாப்பிட ஆரம்பித்துள்ளாராம்.
முக்தா, நடிப்பிலும் சைவத்திற்கு மாறுவாரா என்பது தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











