பாட மாட்டேன் என்ற விரதத்தை மண்டேலாவுக்காக உடைத்த கார்லா ப்ரூனி

பிரான்ஸ் அதிபரை காதலித்து மணந்து கொண்டவர் ப்ரூனி. கவர்ச்சிகரமான மாடல் அழகியாகவும், பாடகியாகவும் வலம் வந்த அவர் கல்யாணத்திற்குப் பின்னர் ஒரு முடிவெடுத்தார்.
அது - சர்கோஸி, அதிபர் பதவியில் இருக்கும் வரை பொது இடங்கள் எதிலும் பாட மாட்டேன் என்பது. ஆனால் இந்த முடிவை முன்னாள் தென் ஆப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவுக்காக உடைத்துக் கொண்டுள்ளார் ப்ரூனி.
மண்டேலாவின் 91வது பிறந்த நாள் நியூயார்க்கில் கொண்டாடப்பட்டது. பல்வேறு நாட்டினர் இதில் கலந்து கொண்டனர். சர்கோஸியும், ப்ரூனியும் கூட இதில் பங்கேற்றனர்.
அப்போது நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ப்ரூனி இரு பாடல்களை பாடி அனைவரையும் வியக்க வைத்தார்.
ரேடியோ மியூசிக் ஹாலில் நடந்த கண்கவர் நிகழ்ச்சியில், 41 வயதான ப்ரூனி, டேவ் ஸ்டீவர்ட்டுடன் இணைந்து பாடல்களைப் பாடினார்.
அழகிய கருப்பு நிற உடையில் காணப்பட்ட ப்ரூனி, பிரபலமான சம்ஒன் டோல்ட் மி என்ற பாடலையும், இன்னொரு பாடலையும் பாடினார்.
முதல் பாடலைப் பாடத் தொடங்குவதற்கு முன்பு, இது ஆடுவதற்கான பாடல் அல்லத மாறாக கனவு காண்பதற்கான பாடல் என்று கூறி விட்டுப் பாடினார்.
மண்டேலாவுக்காக மீண்டும் பாடுவது என்ற முடிவை தான் எடுத்ததாக கூறியுள்ளார் ப்ரூனி.


Click it and Unblock the Notifications











