'பந்தயம்' மீது வழக்கு

By Staff

SA Chandrasekar
ஒரு படம் ஆரம்பிக்கப்பட்ட உடனே அந்தப் படத்தின் கதைக்கு உரிமை கொண்டாடி வழக்குப் போடுவது இன்றைய டிரெண்ட் ஆகிவிட்டது.

இதோ... இன்றைய வழக்கு!

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கி வரும் பந்தயம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் உதவி இயக்குனர் ஒருவர் வழக்குத் தொடர்ந்துள்ளார். வழக்குத் தொடர்ந்தவர் பெயர் சுரேஷ். எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்தான் இவர்.

தனது மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

சில ஆண்டுகளுக்கு முன்பு 'முரட்டுப் பயல்' என்ற பெயரில் கதை ஒன்றை எழுதி சினிமா எழுத்தாளர்கள் சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். இதுகுறித்து இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் கூறினேன். அவர் படம் எடுக்க சம்மதித்தார். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் அவர் அந்தக் கதையை எடுக்கவில்லை.

பின்னர் இயக்குனர் பி.வாசுவிடம் கதை கூறினேன். அவர் தனது மகன் சக்தியை கதாநாயகனாக வைத்து 'ஆர்ப்பாட்டம்' என்ற பெயரில் இதனை படமாக எடுத்து வருகிறார். அந்தப் படத்தை நானே இயக்கியும் வருகிறேன்.

இந்நிலையில் 'முரட்டுப்பயல்' கதையை அடிப்படையாகக் கொண்டு 'பந்தயம்' என்ற பெயரில் எஸ்.ஏ.சந்திரசேகர் புதிதாக படம் எடுத்து வருகிறார். உண்மையில் அது என்னுடைய கதை. எனவே அந்த படத்துக்கு தடை விதிக்கவேண்டும், என்று அந்த மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு இன்று 8வது உதவி சிட்டி சிவில் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி பால்ராஜ் பதில் மனு தாக்கல் செய்யும்படி இயக்குனர் சந்திரசேகருக்கும், வி.ஜே. பிலிம்ஸ் பட நிறுவனத்துக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

மேலும் வழக்கு விசாரணையை வரும் 26ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X