ரஜினி படத்தில் தலேர்!

குசேலன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக ஆரம்பித்துள்ளது. படம் குறித்து ஒவ்வொரு நாளும் ஒரு செய்தி வெளியாகி வருகிறது. சில உண்மையாக உள்ளன, சில வதந்திகளாக இருக்கின்றன.
இந்த நிலையில் புதிய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த செய்தியை வெளியிட்டுள்ளவர் படத்தின் இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் குமார்.
பஞ்சாபைச் சேர்ந்த பிரபல பாடகர் தலேர் மெஹந்தி, குசேலன் படத்தில் ஒரு பாடல் பாடவுள்ளாராம். ரஜினிக்கு பின்னணியாக இந்தப் பாடலை அவர் பாடவுள்ளார். இந்த மாதக் கடைசியில் சென்னையில் பாடல் பதிவு நடைபெறவுள்ளதாம்.
இந்த நிலையில் தற்போது ரஜினி, நயனதாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சியை ஹைதராபாத், ராமோஜி ராவ் திரைப்பட நகரில் விறுவிறுப்பாக பதிவு செய்து வருகிறார் இயக்குநர் பி.வாசு.
Comments


Click it and Unblock the Notifications