புதுமுகங்களின் 'என் ஜீவனுக்காக...'
முற்றிலும் புதுமுகங்களை வைத்து ஒரு புதிய படம் தயாராகிறது. படத்தின் தலைப்பு 'என் ஜீவனுக்காக...'
வர்ஷா, தேவிகா, நந்தினி என மூன்று நாயகிகள். அகில், சித்திக் ஆகிய இளைஞர்கள் கதாநாயகர்களாக அறிமுகமாகிறார்கள். மாசி படத்தில நடிக்கும் ஜெய் சக்தி இந்தப் படத்தின் வில்லனாக நடிக்கிறார்.
மாறன் ஜி என்பவர் கதை திரைக்கதை வசனம் இசை இயக்கம் என அனைத்துப் பொறுப்புகளையும் ஏற்றுள்ளார். கணேசன் ஒளிப்பதிவு செய்கிறார்.
தமிழ் திரையுலகின் முன்னணி மக்கள் தொடர்பாளரான நிகில் முருகனின் நீண்ட நாள் உதவியாளர் சரவணன் இந்தப் படத்தின் மூலம் பத்திரிகைத் தொடர்பாளராக உயர்ந்துள்ளார். அனைவரிமும் நல்ல பெயரெடுத்தவர் சரவணன். பிஆர்ஓ சங்கத் தலைவர் விஜயமுரளி, நிகில் முருகன் ஆகியோர் சரவணனுக்கு தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
திமுக அமைச்சர் வேலுவின் மூத்த தனிச் செயலர் ராமதாஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வாழ்த்தினார்.


Click it and Unblock the Notifications











