விமல்,சனுஷா நடித்த எத்தன் ஏப்ரலில் ரிலீஸ்
விமல், சனுஷா ஜோடியாக நடிக்க, களவாணி படத்தை தயாரித்த நசீரின் உருவாக்கத்தில் சுரேஷ் இயக்கியுள்ள எத்தன் படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறதாம்.
களவாணி படத்தை தயாரித்த நசீர் தனது ஷேராலி பிலிம்ஸ் சார்பில் தயாரித்துள்ள படம் எத்தன். களவாணி நாயகன் விமல் இதிலும் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடி போட்டுள்ளார் கேரளத்து சனுஷா.
இது பக்கா குடும்பப் படமாகும் என்கிறார் இயக்குநர் சுரேஷ். இவர் பாலுமகேந்திராவிடம் உதவியாளராக இருந்தவர். தற்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.
சொந்தமாக பிசினஸ் செய்யும் விரும்பும் இளைஞராக இப்படத்தில் நடித்துள்ளார் விமல். அவருக்கு ஜோடியாக நடித்துள்ள சனுஷாவுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறாராம் சுரேஷ்.
படத்திற்கு இசையமைத்துள்ளார் தாஜ் நூர். இவர் வம்சம் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை குடும்பத்தோடு பார்க்கும் வகையில் தரமாக தயாரித்திருப்பதாக கூறும் நசீர், இப்படமும் களவாணி போல மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெறும் என்கிறார் நம்பிக்கையுடன்.


Click it and Unblock the Notifications











