ரஹ்மான்-இசை கலைஞர் சங்கம் பாராட்டு!

ஸ்லம்டாக் மில்லியனர் என்ற ஆங்கில படத்திற்கு இசை அமைத்தற்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கோல்டன் குளோப்) விருது அமெரிக்காவின் பெவர்லி ஹில்ஸ் நகரில் கடந்த 11-ம் தேதி வழங்கப்பட்டது.
ஆஸ்கர் விருதுக்கு இணையானதாக கருதப்படும் இந்த விருதை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை ரஹ்மான் பெற்றார்.
சென்னை திரும்பிய அவருக்கு தமிழக முதல்வர் மற்றும் திரைத்துறையைச் சேர்ந்த பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் சார்பில் அவருக்கு பாராட்டு தெரிவித்து பொன்னாடை அணிவிக்கப்பட்டது. சங்கத்தின் சேர்மன் என். சாரங்கபாணி, பொதுச்செயலாளர் ஆபு கேப்ரியல், மற்றும் அறங்காவலர்கள் கல்யாணசுந்தரம், வி.ஆர்.சேகர், பி.ஜி.வெங்கடேஷ் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Click it and Unblock the Notifications











