சுடலைவடிவை அலைகழித்த போலீஸ்..

முன்னதாக இவர் அசின், நல்லமுத்துக்குமார் குறித்து சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவை அவர் செங்குன்றம் போலீசாரிடம் விசாரிக்கக் கொடுத்துள்ளார்.
இதை விசாரித்த செங்குன்றம் போலீசார் சுடலைவடிவின் வீடு சோழவரம் காவல் நிலைய எல்லைக்கு உள்ளே வருவதை 'கண்டுபிடித்து' சோழவரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும்படி அனுப்பி வைத்துவிட்டனர்.
இதையடுத்து சோழவரம் காவல் நிலையத்தில் சுடலை வடிவு புகார் கொடுக்க சென்றபோது அங்கிருந்த இன்ஸ்பெக்டர் நசீர், இது சென்னை புறநகர் கமிஷனர் எடுக்க வேண்டிய நடவடிக்கை. என்னிடம் கொடுத்து என்ன பலன் என்று திருப்பி அனுப்பிவிட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து சுடலை வடிவு, காவல் நிலைய எல்லை காரணமாக போலீசார் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். என் மகனை கொலை செய்துவிட்டார்களா, அல்லது உயிருடன்தான் இருக்கிறானா என்று தெரியவில்லை. எனவே நான் தமிழக முதல்வரிடம் புகார் தரப் போகிறேன் என்றார்.
சுடலைவடிவிடம் டிஎஸ்பி விசாரணை:
இந் நிலையில் இன்று சுடலைவடிவிடம் பொன்னேரி டிஎஸ்பி ரங்கராஜன் விசாரணை நடத்தினார். பின்னர் திருவள்ளூர் போலீஸ் எஸ்பி சாரங்கனை சந்திக்க அவரை போலீஸ் ஜீப்பில் அழைத்து சென்றார்.


Click it and Unblock the Notifications











