இரு அரவாணிகள் - இரு படங்கள்

By Staff

தமிழக திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக இரு அரவாணிகள், இரு படங்களில் லீட் ரோல்களில் நடிக்கின்றனர்.

கற்பகா என்கிற அரவாணி, பால் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ரேவதி என்கிற அரவாணி, தெனாவெட்டு படத்தில் முக்கிய கேரக்டரை ஏற்றுள்ளார். ரேவதியின் நடிப்புத் திறனைப் பார்த்து, அவருடைய கேரக்டரை மேலும் நீட்டித்துள்ளனராம்.

பால் படத்தை சிவக்குமார் இயக்குகிறார். இப்படத்தில் காதல் கந்தாஸ்தான் நாயகன். அரவாணிகள் சந்திக்கும் பிரச்சினைகளை அலசும் படம் இது. இதில் கற்பகாவுக்கு முக்கிய கேரக்டர் தரப்பட்டுள்ளது.

இப்படம் குறித்து சிவக்குமார் கூறுகையில், மும்பையில் அரவாணிகளின் வாழ்நிலை குறித்து 2 மாதங்களுக்கு ஆய்வு நடத்தினோம். இதில் எங்களுக்கு லிவிங் ஸ்மைல் என்கிற நூலை எழுதிய அரவாணி வித்யா உதவியாக இருந்தார். இவர் பால் மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் அரவாணி ஆனவர்.

இந்த ஆய்வின் விளைவுதான் பால் திரைப்படம் உருவான கதை. வித்யாவின் மறுபக்கத்தை இப்படத்தில் காட்டியுள்ளோம் என்றார்.

வி.வி.கதிர் இயக்க, ஜீவா, பூனம் பாஜ்வா ஜோடியில் உருவாகியுள்ள தெனாவெட்டு படத்திலும் அரவாணிக்கு முக்கிய கேரக்டர் தரப்பட்டுள்ளது. அரவாணி ரேவதியின் நடிப்பு மிரட்டலாக இருக்கும் என்கிறார்கள். அந்த அளவுக்கு அசத்தியுள்ளாராம் ரேவதி.

இதுதவிர அச்சுப்பிழை என்கிற இன்னொரு படமும் அரவாணிகளை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இதை விக்னேஷ் இயக்கியுள்ளார். சமீபத்தில் மதுரையில் நடந்த அரவாணிகள் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டது.

ஒரு காலத்தில் அரவாணிகளை கேலி செய்தும், கோமாளித்தனமாக காட்டியும் வந்த தமிழ் சினிமா இன்று அரவாணிகளுக்கு நல்ல அங்கீகாரம் கொடுத்துள்ளது பாராட்டுக்குரியதுதான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X