3 இடியட்ஸ்.. நட்புடன் பிரிந்தார் விஜய்! - தயாரிப்பாளர் அறிவிப்பு
3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் நட்புடன் பிரிந்துவிட்டார் என்று அறிவித்துள்ளது ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருந்த 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக்கில் விஜய் நாயகனாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் ஆரம்பத்திலிருந்தே இந்த படம் குறித்து எதிர்மறைச் செய்திகள் வந்தவண்ணமிருந்தன.
இந்த நிலையில் திடீரென இந்தப் படத்திலிருந்து விஜய் விலகிவிட்டார் என செய்திகள் வந்தன. ஆனால் இன்னொரு பக்கம், விஜய் தானாக விலகவில்லை, நீக்கப்பட்டார் என்றும், இதற்கு அதிகார பலமிக்க சிலரது வற்புறுத்தல் காரணம் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இது தொடர்பாக இயக்குநர் ஷங்கரும், தயாரிப்பாளர் ஜெமினி நிறுவனமும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இப்போது முதல்முறையாக இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது ஜெமினி நிறுவனம். அதில், "3 இடியட்ஸ் படத்திலிருந்து விஜய் விலகிக் கொண்டார். சுமுகமான முரையில் நண்பராகவே அவர் பிரிந்தார். அவருக்குப் பதில் வேறு ஹீரோவை ஒப்பந்தம் செய்யும் முயற்சியில் உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.
இப்போது விஜய்க்கு பதில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சு நடப்பதாகக் கூறப்படுகிறது. சூர்யாவோ, தமிழ் தெலுங்கு இரண்டிலுமே நானே நாயகனாக நடிப்பதாக இருந்தால் சம்மதம் என்று கூறி வருகிறாராம்.


Click it and Unblock the Notifications











