மீண்டும் விசாரணைக்கு வரும் கிரகலட்சுமி வழக்கு!

நடிகர் பிரசாந்துக்கும் சென்னையைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் கடந்த 2005ம் ஆண்டு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து பெற்றனர்.
இந் நிலையில் 1998ம் ஆண்டு கிரகலட்சுமி, நாராயண வேணு பிரசாத் என்பவரை முதல் திருமணம் செய்து அதை மறைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையே நாராயண வேணு பிரசாத் மீது கிரகலட்சுமி சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தனக்கும், நாராயண வேணு பிரசாத்துக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனால் அவர் போலியான ஆவணங்கள் மூலம் திருமணம் நடந்ததாக பொய் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்று கூறி இருந்தார்.
இந்த வழக்கை சைதாப்பேட்டை 18வது கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து கிரகலட்சுமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை நீதிபதி நாகமுத்து விசாரித்தார். கிரகலட்சுமி தொடர்ந்த வழக்கை சைதாப்பேட்டை கோர்ட்டு மீண்டும் விசாரித்து 2 மாதத்தில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து வேணுபிரசாத்-கிரகலட்சுமி முதல் திருமண வழக்கு மீண்டும் விசாரிக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











