ஆஸ்கருக்கு 'ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி'

பிரபல நாடக நடிகர் பரேஷ் மொகாஷியின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான வெளிநாட்டுப் படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி பங்கேற்கிறது.
2 மணி நேரம் ஓடும் இந்தப் படம், இந்திய சினிமாவின் தந்தை என போற்றப்படும் தாதாசாஹேப் பால்கேவின் போராட்டங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். 1913ம் ஆண்டு வெளியான முதல் இந்திய பொழுதுபோக்குப் படமான ஹரீஷ்சந்திராவை வெளியிட அவர் பட்ட சிரமங்களை இந்தப் படம் விளக்குகிறது.
ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அனுப்பப்படும் தகவலை இந்திய திரைப்பட சம்மேளனத்தின் தலைவரான ஆஷா பரேக் தெரிவித்துள்ளார்.
Comments
award ஆஸ்கர் விருது போட்டி மராத்தி படம் ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி harishchandrachi factory india entry marathi movie oscars


Click it and Unblock the Notifications