டிரம்மருடன் காதலில் ஸ்ருதி கமல்?

By Staff

Sruthi Kamal
இந்தியாவில் நடந்தாலும் சரி, வெளிநாட்டில் நடந்தாலும் சரி... எப்போதும் தனது இசைக்குழு கூடவே இருக்க வேண்டும் என்று கமல் மகள் ஸ்ருதி அடம் பிடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்குக் காரணம் அந்த இசைக்குழுவில் டிரம்மராக இருக்கும் ஜெர்ரியுடன் அவருக்கு ஏற்பட்டுள்ள காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி, இந்தியில் லக் என்ற படத்தில் நடிக்கிறார். இதன் ஷூட்டிங் தென் ஆப்ரிக்காவில் நடந்தது. அப்போது தனது இசைக் குழுவுடன் அவர் தென் ஆப்ரிக்கா சென்றார். இதற்கான மொத்த செலவும் தயாரிப்பாளர் தலையில் விழுந்ததாம். கமல் மகள் என்பதால் பல்லைக் கடித்துக் கொண்டு செய்தாராம்.

வெளிநாட்டில் ஷூட்டிங் நடந்தால் கூட அங்கேயும் தனது இசைக் குழு வேண்டும் என்று தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் உத்தரவு போடுகிறாராம்.

இதனால் படப்பிடிப்பும் பாதிப்பதோடு, செலவும் இரு மடங்காவதாக புகார் எழுந்துள்ளது.

மும்பையில் ஷூட்டிங் நடந்தாலும் அவர் தனது இசைக் குழுவுடன் செல்கிறாராம் ஸ்ருதி.

இந்தப் புகார் குறித்து ஸ்ருதி கூறியதாவது:

எனது இசைக் குழுதான் எனக்கு எல்லாமே. நான் வெளியில் எங்கே சென்றாலும் குழுவினரும் என்னுடன் வருவார்கள். சமீபத்தில் மும்பையில் பேஷன் ஷோ நடந்தது.

இதில் பேஷன் டிசைனர் ரேஹன் வடிவமைத்த உடை அணிந்து நான் நடந்து வர வேண்டும் என்றனர். பேஷன் ஷோவில் இசை நிகழ்ச்சி நடத்தினால் புதுமையாக இருக்கும் எனக் கூறினேன். அதை அவர்கள் ஏற்றனர். இதனால் பேஷன் ஷோவில் முதன்முறையாக இசை நிகழ்ச்சியை எனது குழுவினர் நடத்தினர்.

எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் இசைக் குழுவுடன் செல்லும் நான், ஷூட்டிங்கிற்கு மட்டும் தனியாக சென்றால் எப்படி? அதனால்தான் அவர்களையும் அழைத்துச் சென்றேன். இக்குழுவில் டிரம்ஸ் வாசிக்கும் ஜெர்ரியுடன் எனக்கு காதல் என்கிறார்கள். அதில் உண்மையில்லை. நாங்கள் நண்பர்கள்தான், என்கிறார் ஸ்ருதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X