தீபாவளிக்கு 'களவாடிய பொழுதுகள்'!

படத்தை தீபாவளிக்குக் கொண்டுவந்துவிடும் வேகத்தில் விறுவிறுப்பாக படப்பிடிப்பை மேற்கொண்டு வருகிறார் இயக்குநர் தங்கர் பச்சான்.
பிரபுதேவா - பூமிகா சாவ்லா நடிக்கும் இந்தப் படம் ஒரு நிஜ காதல் கதையை, அதனையொட்டிய நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது.
இந்தப் படத்தில் தந்தை பெரியார் வேடத்தில் நடிக்கிறார் சத்யராஜ். கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணுவும் ஒரு காட்சியில் தோன்றுகிறார்.
"இந்தப் படத்தின் இயக்குநர் நான்தான். ஆனால் வாழ்க்கையில் முதல்முறையாக எனக்கே பார்க்கவேண்டும் என ஆசையாக உள்ள படம் இந்த களவாடிய பொழுதுகள். நல்ல ரசிகனாக இருந்து இந்தப் படத்தை உருவாக்கிவருகிறேன்", என்கிறார் தங்கர் பச்சான்.
படம் தீபாவளிக்கு நிச்சயம் என்கிறார்கள் தயாரிப்பாளர் தரப்பில். அதற்கு முன் அவர்கள் மூன்று படங்களை வெளியிட வேண்டியுள்ளது. நந்தலாலா, பேராண்மை மற்றும் கடைசியாக விநியோக உரிமை பெற்றுள்ள மலை மலை.


Click it and Unblock the Notifications











