மகள் நடித்த முதல் படத்தை பார்த்த கமல்!

இம்ரான் கான் - ஸ்ருதிஹாசன் நடித்துள்ள லக் படம் இம்மாதம் 24-ம் தேதி உலகம் முழுக்க வெளியாகிறது.
இந்தப் படத்தின் சிறப்பு முன்னோட்டக் காட்சி சென்னை ஃபோர் ஃபிரேம்ஸ் திரையரங்கில் நடந்தது. நடிகரும் ஸ்ருதியின் தந்தையுமான கமல்ஹாசன், அவரது மகள் அக்ஷரா, நடிகை கௌதமி, சுப்புலட்சுமி ஆகியோர் இந்தக் காட்சிக்கு வந்திருந்தனர்.
இவர்களுடன் திரையுலகின் முக்கியப் பிரமுகர்கள், நடிகர்கள் பலரும் இந்தப் படத்தைப் பார்த்தனர்.
கமல்ஹாஸனின் அண்ணன் சாருஹாஸன், இயக்குநர்கள் கவுதம் மேனன், ப்ரியதரிஷன், சந்தான பாரதி, லிஸி பிரியதர்ஷன், எஸ்வி சேகர், முனைவர் ஞானசம்பந்தன் உள்பட பலரும் படம் பார்த்து ரசித்தனர்.
படத்தின் இயக்குநர் சோஹம், அவர் மனைவி பினால் ஷா மற்றும் தயாரிப்பாளர் தாவல் ஆகியோர் இந்த சிறப்புக் காட்சியில் கலந்து கொண்டனர்.
Comments
கமல்ஹாசன் சினிமா சிறப்புக் காட்சி தமிழ் லக் ஸ்ருதி ஹாசன் bollywood cinema luck premier show sruthi hassan


Click it and Unblock the Notifications