ஏழைகளுக்கு உதவிய கமல்

By Staff

தமிழக கமல்ஹாசன் ரசிகர்கள் நற்பணி மன்றம் சார்பில் புதிய மாவட்ட நிர்வாகிகள் நியமித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடந்தது.

மயிலாப்பூர் சினிவாச பெத்தாச்சி அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்கத்தின் தலைவர் கலைஞானி கமல்ஹாசன், புதிய நிர்வாகிகளுக்கு நியமனக் கடிதம் வழங்கினார். பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தர்மபுரி தாய் சேய் நல விடுதிக்குத் தேவையான தொட்டில்கள், பேருந்து நிலையத்தில் ஊனமுற்றோர் பயன்படுத்தும் சைக்கிள்கள், மாதர் சங்கத்துக்கு ரூ.5000 உதவித் தொகை, குரோம்பேட்டை நாகல்கேணியில் உள்ள ஆதிதிராவிடர் மாணவர் பள்ளியில் உள்ள 100 மாணவர்களுக்கு சீருடைகள், 500 எவர்சில்வர் தட்டுகள், 10 மின் விசிறிகள், பீரோக்கள், வடசென்னை ராயபுரம் பகுதி ஏழைப் பெண்ணுக்கு மூன்று சக்கர சைக்கிள், உதவும் கைகள் அமைப்பின் தையல் பயிற்சி மையத்துக்கு தேவையான உபகரணங்கள், மத்திய சென்னை செனாய் நகர் பெண்கள் மாநகராட்சி பள்ளி மாணவிகளுக்கு 300 தட்டுகள், ராசிபுரத்தில் உள்ள அன்பு சிறுவர் இல்லத்துக்கு 15 மின் விசிறிகள், உதவும் கரங்கள் இல்லத்துக்கு பாய்கள், சித்ரா என்ற பெண்ணுக்கு தையல் எந்திரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பெண்களுக்கு தையல் எந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை கமல் வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சின்னப்ப நாயக்கன்பாளையத்தில் உள்ள பள்ளிக்கு கமல் நற்பணி இயக்கம் சார்பில் ரூ.70000 செலவில் கட்டப்பட்ட விழாமேடையின் கல்வெட்டைத் திறந்து வைத்தார் கமல்.

ஒசூர் நகர கமல் நற்பணி இயக்கத்தினர் நடத்தும் அன்னை ராஜலட்சுமி இலவச சேவை மையத்தின் சார்பில் அவசர ஊர்தியை கமல் துவக்கி வைத்தார்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கமல் நற்பணி இயக்க கோவை மாவட்ட பொறுப்பாளர் ஆர் தங்கவேலு, மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன், தரிமபுரி ரவிச்சந்திரன், குரோம்பேட்டை மணிவண்ணன், ராசிபுரம் மணி, வடசென்னை சங்கர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X