'கோ' படத்தில் 'நட்சத்திர பாட்டு'... விஜய்-ஆர்யா-தனுஷ் ஆடுகின்றனர்!

By Sudha

கேவி ஆனந்த் இயக்கும் கோ படத்தின் ஒரு பாடலில் விஜய், தனுஷ், ஆர்யா உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் 7 பேர் பங்கேற்கிறார்கள்.

ஜீவா, கார்த்திகா ஜோடியாக நடிக்கும் படம் கோ. நார்வே உள்ளிட்ட வெளிநாடுகளில் படமாகியுள்ளது இந்தப் படம்.

இந்தப் படத்தின் முக்கிய பாடல் காட்சியொன்றில் முன்னணி ஹீரோக்களை ஆட வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் இயக்குநர் கேவி ஆனந்த்.

இந்தியில் அமிதாப் நடித்த நஸீப் படத்தில் ராஜ்கபூர், ராஜேஷ் கண்ணா, தர்மேந்திரா, ஷம்மி கபூர் உள்ளிட்டோர் நடனமாடி அசத்தியிருப்பார்கள். ஜான் ஜானி ஜனார்தன் என்று தொடங்கும் அந்தப் பாடல் உலகப் புகழ் பெற்றது.

இதேபோல சமீபத்தில் ரிலீசான ஷாரூக்கானின் ஓம்சாந்தி ஓம் படத்திலும் நடசத்திரப் பாடலொன்று இடம் பெற்றது. இதில் ஷாருக்கான், ஹிருத்திக்ரோஷன், தர்மேந்திரா, கோவிந்தா, பிரியங்கா சோப்ரா, கஜோல் உள்ளிட்டோர் நடனம் ஆடினர்.

இதுபோல ஒரு பாடலை தமிழில் எடுக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.

இப்போது கேவி ஆனந்த் அதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். கிளப் டான்ஸர் ஒருவருடன் விஜய், சூர்யா, ஆர்யா, ஜெயம்ரவி, பரத், தனுஷ் ஆகியோருடன் ஜீவாவும் நடனம் ஆடுவது போல கட்சி அமைக்க முயற்சித்து வருகிறார். இதற்காக சம்பந்தப்பட்ட ஹீரோக்களுடன் பேச்சு நடக்கிறது.

கதாநாயகிகள் தமன்னா, ஸ்ரேயா, பூனம்பாஜ்வா ஆகியோரும் இப்பாடலில் ஆடுகிறார்கள். ஜெயம்ரவி ஆடும் காட்சியை படமாக்கி விட்டதாக இயக்குனர் கே.வி.ஆனந்த கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X