ஜூலை 1 முதல் குசேலன் பாட்டு!

நேற்று முன்தினம் செய்தியாளர்களைச் சந்தித்த இயக்குநர் பி.வாசு ஜூன் 30 ம் தேதி குசேலன் பட இசை வெளியிடப்படும் என்று கூறியிருந்தார். தமிழ், தெலுங்கு இரு மொழி இசையுமே ஒரே நாளில் லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் ரிலீசாகும் என்று கூறினார்.
ஆனால் தற்போது குசேலன் ஆடியோ ரிலீஸ் போஸ்டர்களில் ஜூலை 1 முதல் இசை வெளியாகும் என அச்சிடப்பட்டுள்ளது.
இரு விதமான போஸ்டர்கள் தயாராகியுள்ளன. அவற்றில் இளமையான ஸ்டைலான ரஜினியின் போஸ்கள் அச்சிடப் பட்டுள்ளன. முதல் பக்கத்தில் மன்னர் கெட்டப்பில் அரியணையில் அமர்ந்திருக்கும் ரஜினியின் ஸ்டில் அசத்தலாக அச்சிடப்பட்டுள்ளது.
ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையில் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 27-ம் தேதி படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications