சரோஜாதேவிக்கு வாழ்நாள் சாதனை விருது

அவருடன் நடிகர் திலீப் குமார், பாடகி லதா மங்கேஷ்கர், இயக்குநரும் பட அதிபருமான தபன் சின்ஹா ஆகியோருக்கும் இந்த விருதினை அரசு வழங்குகிறது.
நாடு விடுதலை பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி கலைத்துறையில் சாதனை படைத்த நால்வருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க மத்திய அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இதற்காக நியமிக்கப்பட்ட தேர்வுக்குழு சரோஜா தேவி, லதா மங்கேஷ்கர், திலீப் குமார் மற்றும் தபன் சின்ஹாவின் பெயர்களைப் பரிந்துரைத்தது.
தபன் சின்ஹாவுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவருடைய வீட்டுக்கே போய் மத்திய அரசின் சார்பில் இந்த விருதினை வழங்குகிறார் மேற்கு வங்க ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி.
Comments


Click it and Unblock the Notifications