ஒரு டிவி தொடரும் திகில் படமும்!

By Staff

Neetu Chandra
மாதவன், நீத்து சந்திரா இணைந்து நடித்துள்ள யாவரும் நலம், பேய், பிசாசுகள் இல்லாமல் பயமுறுத்தும் வித்தியாசமான தொடர்கா அமைந்துள்ளதாக இயக்குநர் விக்ரம் குமார் கூறியுள்ளார்.

டிவி தொடர்களால் பல குடும்பங்கள் சிதறிப் போய் வருவதாக நிறைய செய்திகள் படித்துள்ளோம். ஆனால் ஒரு தொடரால் குடும்பமே பயந்து போகும் கதைதான் இந்த யாவரும் நலம் படத்தின் கதை.

ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில், 13-பி என்ற எண்ணுள்ள வீட்டில் நடக்கும் கதைதான் இப்படத்தின் கதை.

அதாவது டிவியில் யாவரும் நலம் என்ற பெயரில் ஒரு தொடர் ஒளிபரப்பாகிறது. இந்த தொடரில் வரும் நிகழ்வுகள் அனைத்தும் அப்படியே படத்தின் நாயகன், நாயகி குடும்பத்திலும் நடக்கிறது.

இதனால் சுவாரஸ்யமாகும் தம்பதிகள் தொடர்ந்து தொடரைப் பார்த்து வருகின்றனர். ஒரு கட்டத்தில் திடுக்கிடும் சம்பவங்கள் தொடரில் வருகின்றன.

இதனால் குழம்பிப் போகும் நாயகனும், நாயகியும், நமது வீட்டிலும் அப்படி நடக்குமோ என்று அஞ்சுகின்றனர். நடக்கிறதா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.

படத்தில் மாதவனும், நீத்து சந்திராவும் படு இயல்பாக நடித்துள்ளனராம். சரண்யாவும் படத்தில் இருக்கிறார்.

இப்படத்தை அப்படியே 13-பி என்ற பெயரில் இந்தியிலும் கொடுக்கிறார் விக்ரம் குமார்.

பேய், பிசாசு இல்லாமல் திகில் மட்டுமே நிறைந்திருக்கும் படம் இது. அனைவரையும் ரசிக்க வைக்கும், கூடவே சற்று பயப்படவும் வைக்கும், டிவி தொடர்களின் பாதிப்புகளையும் இதில் அலசியுள்ளேன் என்கிறார் விக்ரம் குமார்.

நல்லது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X