திருமணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டோம்! -கரீனா

பாலிவுட்டின் முன்னணி நடிகை கரீனா கபூரும் நடிகர் சாயிஃப் அலிகானும் காதலித்து வருகிறார்கள். விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் பலமான பேச்சு அடிபட்டது. இருவரும் சாயிஃப் தந்தை பட்டோடி முன்பாக மோதிரமும் மாற்றிக் கொண்டார்கள்.
ஆனால், திடீரென்று திருமணத்தைத் தள்ளிப் போட்டுவிட்டதாக அறிவித்துள்ளார் கரீனா கபூர்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
நானும் சாயிஃபும் இப்போது திருமணத்துக்கு அவசரப்படவில்லை. திருமணம் செய்து கொண்டு நடிப்பு வாழ்க்கையின் அற்புதமான தருணங்களை இழக்க நாங்கள் விரும்பவில்லை. இப்போதைக்கு எனக்கு தூங்கக் கூட நேரமில்லை. அவ்வளவு பிஸி. திருமணம் கிட்டகிறது. கேரியர்தான் முக்கியம். இப்போது விட்டால் இந்த கணங்கள் திரும்ப வராது.
குறைந்தபட்சம் இன்னும் இரு ஆண்டுகளாவது நாங்கள் திருமணம் பற்றிச் சிந்திக்கும் மனநிலையில் இல்லை. திருணம் நடக்காவிட்டாலும், சாயிஃபின் தொழில் முன்னேற்றத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பேன் என்கிறார் கரீனா.


Click it and Unblock the Notifications











