திருமதி சென்னை போட்டி- விண்ணப்பிக்கலாம்

இதுகுறித்து போட்டியை நடத்தவுள்ள வெர்கோ ஈவெண்ட் மற்றும் நேச்சுரல்ஸ் நிறுவனம் சார்பில் பூர்ணிமாகுமார், லதா கிருஷ்ணா, குமாரவேல் ஆகியோர் கூறுகையில்,
திருமணமான பெண்கள் சமையல், வாகனங்கள் ஓட்டுதல், குடும்பத்தை நன்றாக பராமரித்தல், கம்ப்யூட்டரை கையாளுதல், ஆளுமைத்திறன், உடல் திறன், கற்பனைத்திறன் உள்ளிட்டவற்றை கொண்டு திருமதி சென்னை தேர்வு செய்யப்படுகிறார்கள்.
இந்த வருடம் வயது வரம்பு கிடையாது. தமிழ்நாடு முழுவதும் இருந்து பெண்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் அனைத்து நேச்சுரல்ஸ் யூனிஸெக்ஸ் கிளைகளிலும் விண்ணப்பங்கள் பெறலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேர வருகிற 30 ந் தேதி கடைசி நாள். போட்டியை காண டிக்கெட் ரூ.250, ரூ.500 க்கு கிடைக்கும். அதில் கிடைக்கும் பணம் ஏழை மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கு செலவிடப்பட உள்ளது. டிசம்பர் 11ம் தேதி சென்னை காமராசர் அரங்கில் நிகழ்ச்சி நடைபெறும்.
போட்டியில் வெற்றி பெறும் முதல் 3 திருமதிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்புள்ள கிரீடம் சூட்டப்படுகிறது என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications











